|
| ஆந்திரா மதக்கலவரம் : ஊரடங்கு நீட்டிப்பு |
| ஐதராபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 11 அக்டோபர் 2008 ( 13:50 IST ) | |
ஆந்திரா மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்த பைன்ஷா நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிலாபாத் மாவட்டம் பைன்ஷா நகரில், தசரா பண்டிகை நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து துர்கா சிலைகளை கரைப்பதற்காக அவற்றை இந்துக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அந்த ஊர்வலம் மசூதி ஒன்றின் அருகே வந்தபோது, ஊர்வலத்தில் சென்றவர்கள் வண்ணப் பொடியை தங்கள் மீது வீசியதாகவும், மசூதி மீது கல்லெறிந்ததாகவும் ஒரு தரப்பினர் கூறினர்.ஆனால் மற்றொரு தரப்பினர் தாங்கள் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.ஒருவரை ஒருவர் வாள், கத்தி, கம்பு மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர்.இந்த மோதலில் 40 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு பின்னர் தீ வைத்து கொளுத்தப்பட்டன.மேலும் 12 வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அத்துடன் அங்கிருந்த ஜின்னிங் தொழிற்சாலைக்குள் புகுந்த கலவரக் கும்பல், அங்கு நூல் ஏற்றப்பட்டிருந்த 3 லாரிகளையும் தீ வைத்துக் கொளுத்தியது.
இதனையடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த அந்த இடத்திற்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் கலவரக்காரர்களை கலைக்க தடியடி நடத்தியும் பயனில்லாமல் போகவே, பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.அதன் பின்னரே கலவரக் கும்பல் கலைந்து ஓடியது.
இந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் ; 15 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பைன்ஷா நகரில் நேற்றிரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்றும் அங்கு தொடர்ந்து பதற்றம் காணப்படுவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனில் குமார் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|