|
| விமானத்தில் திடீர் புகை : 130 பேர் உயிர் தப்பினர் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008 ( 12:59 IST ) | |
டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானி அறையில் ஏற்பட்ட திடீர் புகை ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
115 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன் ஏர் இந்தியா 777 - 300 ரக போயிங் விமானம் ஒன்று, இன்று காலை 6.50 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே,விமானி அறையிலிருந்து திடீர் புகை ஏற்பட்டது.
இதனால் உடனடியாக டெல்லி விமானக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, புகை வருவது குறித்து தெரியப்படுத்தியதோடு, விமானத்தை உடனடியாக தரையிறக்கப்போவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் , ஏணிகள் மற்றும் இதர உபகரணங்கள் விமான ஓடு பாதை அருகே நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், காலை 7.50 மணிக்கு அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.இதனால் பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் உள்ளிட்ட 130 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடந்த மூன்று தினங்களில் டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது இது இரண்டாவது தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|