யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர் : முதல் ரயில் போக்குவரத்து: பிரதமர் துவக்கிவைத்தார்
ஸ்ரீநகர் (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008   ( 12:52 IST )
காஷ்மீர் பள்ளத்தாக்கின் கனவுத் திட்டமான முதல் ரயில் போக்குவரத்தை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நவ்காம்- அனந்நாக் இடையே ரயில் போக்குவரத்து அம்மாநில மக்களின் நீண்டகால கனவாக இருந்தது. கடந்த சில மாதங்களாக இதற்கான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று, சமீபத்தில் நிறைவடைந்தன.

தற்போது 2 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு-காஷ்மீர் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் இந்த ரயில் சேவையை இன்று துவக்கி வைத்தார்.

நாவ்காம் நகரிலுள்ள ஸ்ரீநகர் ரயில் நிலையத்திலிருந்து, முதல் ரயிலை பிரதமர் மன்மோகன் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ், மாநில ஆளுனர் வோரா, முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் மற்றும் முக்கிய தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விமானத்தில் திடீர் புகை : 130 பேர் உயிர் தப்பினர்
தலாய் லாமா அக். 14 ல் டிஸ்சார்ஜ்
அக்.13ல் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு!
வங்கி டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளது : ப. சிதம்பரம்
ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு : தேர்தல் ஆணையம் ஆய்வு
ராவண வேடம்: ஹர்பஜனுக்கு எதிராக வழக்கு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...