|
| அக்.13ல் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு! |
| புதுடெல்லி (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008 ( 10:52 IST ) | |
மதக் கலவரம் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு வரும் 13ம்தேதி நடைபெறுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டம் வரும் 13ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரம், கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவது ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடைவிதிப்பது குறித்தும் விவாதிக்கப்படும்.
உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் போதிய கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|