யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
வங்கி டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளது : ப. சிதம்பரம்
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008   ( 19:06 IST )
உலக அளவில் நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி ந்திய சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,ங்கிகளில் உள்ள சேமிப்பு தொகைகள் பத்திரமாக உள்ளது என்று த்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட கடும் வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சிதம்பரம், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக உள்ளது என்றும், வங்கிகளில் உள்ள சேமிப்பு டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளது என்றும் கூறினார்.

சந்தையில் பண புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்ட சிதம்பரம், உலக அளவில் நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தாக்கத்தை இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் அவசியப்பட்டால் பண புழக்கத்தை மேலும் அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும்,நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கும் அனைவரும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார் சிதம்பரம்.

மேலும் பணபுழக்கம் அதிகரிக்க மக்களின் பங்களிப்பும் உள்ளது என்ற கருத்தை மறைமுகமாக வலியுறுத்திய சிதம்பரம், ஆறாவது ஊதியக் கமிஷன் மூலம் ஊதிய உயர்வு பெற்ற அரசு ஊழியர்களும், தீபாவளி போனஸ் பெற்றவர்களும் கொஞ்ச பணத்தையாவது செலவழிக்க வேண்டும; கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும் என்றார்.

வங்கிகளில் உள்ள சேமிப்புகள் முற்றிலும் பத்திரமாகவே உள்ளது.அதே சமயம் அவரவரின் 'ரிஸ்க்' திறனை பொருத்து வங்கிகள் அல்லாத மாற்று திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.'ரிஸ்க்' எடுக்க தயங்குபவர்கள் வங்கிகளிலேயே சேமிக்க வேண்டும் என்று சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு : தேர்தல் ஆணையம் ஆய்வு
ராவண வேடம்: ஹர்பஜனுக்கு எதிராக வழக்கு
ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் 2 நாள் சுற்றுப்பயணம்!
பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்கா பயணம்!
'பணிபுரியும் பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்ற நகரம்'
அக். 21ல் பிரதமர் ஜப்பான், சீனா பயணம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...