|
| ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு : தேர்தல் ஆணையம் ஆய்வு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 17:49 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்காக, அம்மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆய்வு செய்தது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், அங்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற தலைமை தேர்தல் கமிஷனர்கள், கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தலைநகர் ஸ்ரீநகரில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.அதே சமயம் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையம் முடிவிற்கே விட்டுவிடுவதாக தெரிவித்துவிட்டது.
ஆனால் இதர கட்சிகள்,மாநிலத்தில் தற்போது தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என்றும், இருப்பினும் இது விஷயத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முடிவுக்கு தாங்கள் கட்டுப்படுவதாக தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக பாதுகாப்பு நிலை உள்ளதா என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் என். கோபாலசாமி தலைமையிலான மூன்று உறுப்பினர்கள்,மத்திய உள்துறை அமைச்சக செயலர் மதுக்கர் குப்தாவுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து ஏதும் தகவல் இல்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|