|
| ராவண வேடம்: ஹர்பஜனுக்கு எதிராக வழக்கு |
| சண்டிகர் (ஏஜென்சி), 10 அக்டோபர் 2008 ( 16:14 IST ) | |
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ராவண வேடமிட்டு நடித்ததற்காக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அண்மையில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை மோனாசிங்குடன் ராவண வேடமிட்டு நடனமாடினார். இதற்காக சில சீக்கிய அமைப்புகள் ஹர்பஜனுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் ஹர்பஜனுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் சண்டிகர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
ராவண வேடமிட்டு நடித்ததன் மூலம் ஹர்பஜன்சிங், மோனாசிங், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி ஆகியவை இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி காஞ்சன் மகி, வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.
28 வயதாகும் நட்சத்திர வீரர் ஹர்பஜன்சிங், அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த ஆண்டு தொலைக்காட்சி விளம்பரத்தில் தலைமுடியை விரித்து ஆடியதாக, சீக்கிய அமைப்புகளின் கண்டனத்திற்கு அவர் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|