|
| ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் 2 நாள் சுற்றுப்பயணம்! |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 13:20 IST ) | |
பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் வருகிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் நவுகான் - புத்காம் இடையேயான முதல் ரயில் போக்குவரத்து, பாக்லிஹர் நீர்மின் திட்டம் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இரண்டு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் ஜம்மு-காஷ்மீர் வருகிறார்.
ஜம்மு மாகாணத்தில் உள்ள உதம்பூர் விமானத்தளத்தில் இன்று மதியம் வந்திறங்கும் பிரதமர், அங்கிருந்து தோடா மாவட்டத்துக்கு செல்கிறார்.
அங்கு பாலிகார் அணையில் செனாப் ஆற்றில் கட்டப்பட்டுள்ள 450 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கு நடக்கும் ராணுவம், துணை ராணுவப்படை மற்றும் உள்ளூர் போலீசாரின் அணி வகுப்பை பார்வையிடுகிறார்.
இதன் பின்னர் ஸ்ரீநகர் வரும் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், பிடிபி, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகையையொட்டி, பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு நாளைய தினத்தை உள்ளூர் ஊரடங்கு (Civil curfew) ஆக அறிவித்துள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி, ஹெலிகாப்டர் மூலம் வான்வழி பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|