|
| பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்கா பயணம்! |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 13:18 IST ) | |
இந்தியா ௦- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலிசா ரைஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
இதற்கிடையே, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நேற்றிரவு ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தம் குறித்தும், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளியிட்ட அறிக்கை குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதைதொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இருவரும் கையெழுத்திட்ட உடனேயே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|