யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'பணிபுரியும் பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்ற நகரம்'
இரவு நேரங்களில் பணி புரியும் பெண்களுக்கு ஆபத்தான நகரங்கள் பட்டியலில் நாட்டிலேயே டெல்லி முதலிடத்தில் இருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தலைநகர் டெல்லியில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர், அண்மையில் இரவுப் பணியை முடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேபோல் டெல்லியில் இரவு நேரப்பணிகளில் ஈடுபட்டு வரும் தகவல் தொழில்நுட்பம், பிபீஓ துறை பணியாளர்கள் பலரும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் 'அசோசம்' அமைப்பு, இரவு நேரம் பணிபுரிந்து வரும் பெண்களிடம் நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், இரவு நேரம் பணி புரிவதற்கு டெல்லி மிகவும் ஆபத்தான நகரம் என்று 65 சதவீதப் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் 52 சதவீதம் பேரும், வர்த்தக நகரான மும்பையில் 26 சதவீதம் பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர். இதில் ஐதராபாத், சென்னை நகரங்கள் முறையே 35 மற்றும் 28 சதவீதமாக உள்ளன.

இரவு நேரத் தாக்குதல்களுக்கு அதிகம் ஆளாவது பெண் பணியாளர்கள் தான். இரவு நேரங்களில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாதது, இதற்கு ஒருவகையில் காரணமாகிறது என்று 'அசோசம்'ஆய்வு தெரிவிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அக். 21ல் பிரதமர் ஜப்பான், சீனா பயணம்!
கா‌ஷ்‌மீ‌ர் : தீ‌விரவா‌தி உட்பட இருவர் பலி
தனி தெலுங்கானாவிற்கு ஆதரவு: சந்திரபாபு நாயுடு
காஷ்மீர் : ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
தடை : மத்திய அரசுக்கு பஜ்ரங் தளம் சவால்
கருத்து வேறுபாடு: ஒரிசா அரசு கலைப்பு இல்லை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...