|
| காஷ்மீர் : தீவிரவாதி உட்பட இருவர் பலி |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 19:01 IST ) | |
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் ஜெய்ஷ்- இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் உட்பட இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் வனப் பகுதியில் உள்ள வார்போரா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டுத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதில் ஒருவர் ஜெய்ஷ்- இ முகமது இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பாசா என்று தெரிய வந்துள்ளது. மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை.
தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் வெடித்ததாகவும், சண்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதி பாசா கொல்லப்பட்டுள்ளது ஜெய்ஷ்- இ முகமது அமைப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவு என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|