|
| தனி தெலுங்கானாவிற்கு ஆதரவு: சந்திரபாபு நாயுடு
|
| ஐதராபாத் (எஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 18:58 IST ) | |
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் கோரிக்கையை தனது கட்சி ஆதரிப்பதாக, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தெலுங்குதேசம் கட்சியின் பொலீட்பீரோ கூட்டம், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு விளக்கினார்.
"தெலுங்கானா பகுதியில் வசிக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் கோரிக்கையை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தேவை. இவ்விவகாரத்தில் நாங்கள் சரியான முடிவை எடுத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
"இப்பிரச்னையில் அரசியல் நோக்கத்துடனோ, ஆதாயம் பெறுவதற்காகவோ நாங்கள் இதைச் செய்யவில்லை. உணர்வுபூர்வமான இவ்விவகாரத்தை இரண்டரை ஆண்டுகளாகத் தெலுங்கு தேசம் தீவிரமாக ஆராய்ந்து, தற்போது இம்முடிவுக்கு வந்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"அரசியல் சானத்திற்கு உட்பட்டு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை தனது கட்சி மேற்கொள்ளும் என்றார் சந்திரபாபு நாயுடு.
இம்முடிவால், எதிர்வரும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|