|
| காஷ்மீர் : ஊடுருவல் முயற்சி முறியடிப்பு |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 16:49 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே தீவிரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
நேற்றிரவு இந்திய துருப்புகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில், எல்லைக்கப்பாலிருந்து பாகிஸ்தான் துருப்புகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கும்போதே,தீவிரவாதிகள் குழு ஒன்று, இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்தது.
ஆனால் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே பாதுகாப்புக்கு நின்றிருந்த இந்திய வீரர்கள் தீவிரவாதிகளின் ஊடுருவலை கண்டறிந்து அவர்களை விரட்டியடிக்கும் நோக்கில் சுட்டனர்.
இதனையடுத்து தீவிரவாதிகளும் இந்திய படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.இரு தரப்பிற்கும் சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், இந்திய படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்குள்ளேயே ஓடிவிட்டனர்.
அதே சமயம் இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த 12 நாட்களில் நடைபெறும் நான்காவது ஊடுருவல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|