யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தடை : மத்திய அரசுக்கு பஜ்ரங் தளம் சவால்
புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008   ( 15:47 IST )
தைரியமிருந்தால் ஜ்ரங் தளத்தை மத்திய அரசு தடை செய்து பார்க்கட்டும் என அந்த இயக்கத்தின் தலைவர் சவால் விடுத்துள்ளார்.

சமீபத்திய ஒரிஸ்ஸா கலவரங்களுக்கும், கர்நாடகாவில் தேவாலயங்கள் தாக்கப்பட்டதற்கும் பஜ்ரங் தளம் தான் காரணம் என்றும், எனவே 'சிமி' இயக்கத்தை தடை செய்ததுபோன்று பஜ்ரங் தளம் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகின்றன.

இது குறித்து நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அது குறித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தைரியமிருந்தால் பஜ்ரங் தளத்தை மத்திய அரசு தடை செய்து பார்க்கட்டும் என்றும், அவ்வாறு தடை செய்தால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் பிரகாஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பஜ்ரங் தளத்தை தடை செய்தால், அதனை எதிர்த்து நாங்கள் போராடுவோம்.அத்துடன் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மக்களிடம் சென்று விளக்குவோம்.விரைவிலேயே தேர்தல்கள் வரவிருப்பதால் அதற்கான விலையை அரசு கொடுக்க வேண்டியதிருக்கும்.

ஒரிஸ்ஸா கலவரத்திற்கு பஜ்ரங் தளத்தினருக்கு தொடர்பு இருப்பது எனக் கூறப்படுப்வது தவறானது.பஜ்ரங் தளத்திற்கு வன்முறை போன்றவற்றில் ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.எங்களுடைய நோக்கம் இந்துக்களை பாதுகாக்க மக்கள் போராட்டம் மூலம் அரசை முடுக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் ஊடகங்கள்தான் பஜ்ரங் தளம் பற்றிய எதிர்மறையான செய்திகளை வெளியிடுகின்றன என அவர் மேலும் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருத்து வேறுபாடு: ஒரிசா அரசு கலைப்பு இல்லை!
காஷ்மீர் ரயில்சேவை: 11ல் பிரதமர் தொடங்குகிறார்!
ஒரிசா அரசு டிஸ்மிஸ்?: இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
குஜராத்தில் 'நானோ': டாடா-மோடி ஒப்பந்தம்!
அஸ்ஸாம் வன்முறை : பலி 41 ஆக உயர்வு
'பஜ்ரங் தளத்தை தடை செய்ய அரசு தயங்காது'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...