|
| கருத்து வேறுபாடு: ஒரிசா அரசு கலைப்பு இல்லை! |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 09:58 IST ) | |
ஒரிசாவில் மதக்கலவரம் நீடித்துவரும் நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மதக் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒரிசா அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மதக் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்படும் பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளை தடை செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஒரிசா அரசை 356வது பிரிவை பயன்படுத்தி, டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த லாலு பிரசாத், ராம் விலாஸ் பஸ்வான், அர்ஜூன் சிங், ஏ.ஆர்.அந்துலே மற்றும் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், விரைவில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிடும் அபாயம் இருப்பதால், இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், ஒரிசா அரசை கலைப்பதில் மத்திய அமைச்சரவையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எனினும், ஒரிசாவிற்கு மத்திய அமைச்சரவை குழு ஒன்றை அனுப்பி நிலவரத்தை கண்டறியவும், பஜ்ரங் தள் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி ஆதாரங்கள் திரட்டவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர, தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது என தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
சமீபகாலமாக நீதிபதிகள் மீது கூறப்படும் ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க, தனி விசாரனை கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|