யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஒரிசா அரசு டிஸ்மிஸ்?: இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 8 அக்டோபர் 2008   ( 11:19 IST )
ஒரிசா மதக்கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஒரிசா மாநில அரசை டிஸ்மிஸ் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.

ஒரிசாவில் கடந்த ஆகஸ்ட் மாதம், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை வெடித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. கன்னியாஸ்தி உள்பட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்துள்ளன.

விஸ்வ ஹிந்து பரித் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் இந்த வன்முறையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளன.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை கட்டுப்படுத்தும்படி மத்திய அரசு, ஒரிசா மாநில அரசுக்கு இருமுறை எச்சரிக்கை விடுத்தும் ன்முறை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த பிரச்சனையில் உடனே தலையிடும்படியும் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய அமைச்சர்கள் சிலர் கேட்டுக்கொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதில் ஒரிசா வன்முறை, அசாம் கலவரம் ஆகிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

அதோடு, ஒரிசா மாநில அரசை டிஸ்மிஸ் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குஜராத்தில் 'நானோ': டாடா-மோடி ஒப்பந்தம்!
அஸ்ஸாம் வன்முறை : பலி 41 ஆக உயர்வு
'பஜ்ரங் தளத்தை தடை செய்ய அரசு தயங்காது'
துப்பு துலங்காத டெல்லி குண்டு வெடிப்பு
கலவரம் வெடித்த மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் : பா.ஜ.
மக்கள் அதிருப்தி: காஷ்மீரில் ஊடரங்கு ‌வாபஸ்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...