யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
குஜராத்தில் 'நானோ': டாடா-மோடி ஒப்பந்தம்!
அகமதாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 8 அக்டோபர் 2008   ( 11:00 IST )
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வெளியேறிய டாடா நிறுவனத்தின் 'நானோ கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் அமைகிறது. ரத்தன் டாடா - மோடி இடையே இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

ரூ.1 லட்சம் விலையுள்ள நானோ கார் தொழிற்சாலையை மேற்குவங்க மாநிலம் சிங்குரில் டாடா நிறுவனம் அமைத்து வந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் தொடர் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக கடந்தவாரம் ரத்தன் டாடா அறிவித்தார்.

இதையடுத்து, தங்களது மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க வரும்படி கர்நாடகா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்கள் அழைப்பு விடுத்தன. குஜராத் முதல்வர் மோடியும் டாடாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சானந்த் என்ற இடத்தில், 'நானோ' கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

டாடா தொழிற்சாலை நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா, முதல்வர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர், இருதரப்பினர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

'நானோ' கார் தொழிற்சாலை அமைக்கப்படும் இடமான சானந்த், அகமதாபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஆனந்த் விவசாய பல்கலைக்கு சொந்தமான 2,220 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் மாநில அரசுக்கு மாற்றப்பட்டு, அதில், 1,100 ஏக்கர் நிலம் டாடா நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.

இது அகமதாபாத் அருகே இருப்பது மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளது. அதோடு, பக்கத்து மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. சில மணி நேரத்தில் மும்பை நகரத்தை அடைந்துவிட முடியும் என்பதும் கூடுதல் வசதி. இதுபோன்ற பலவேறு வசதிகள் காரணமாக இந்த இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் மாநிலத்தில் அமையவிருந்த ஒரு பிரபலமான கார் தொழிற்சாலையை, தனது மாநிலத்தில் அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அஸ்ஸாம் வன்முறை : பலி 41 ஆக உயர்வு
'பஜ்ரங் தளத்தை தடை செய்ய அரசு தயங்காது'
துப்பு துலங்காத டெல்லி குண்டு வெடிப்பு
கலவரம் வெடித்த மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் : பா.ஜ.
மக்கள் அதிருப்தி: காஷ்மீரில் ஊடரங்கு ‌வாபஸ்!
ஆந்திரா: இருமாதங்களில் 10 நெசவுத் தொழிலாளர்கள் தற்கொலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...