|
| அஸ்ஸாம் வன்முறை : பலி 41 ஆக உயர்வு |
| உதல்குரி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 17:04 IST ) | |
அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு இன்று மேலும் ஒருவர் பலியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
உதல்குரி மற்றும் தர்ரங் மாவட்டங்களில் போடோ பழங்குடியினருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து குடியேறிய இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், உதல்குரி மாவட்டத்தில் உள்ள கசுபில் என்ற இடத்தில் இன்று மேலும் ஒருவர் கலவரத்திற்கு பலியானார்.இதனால் கலவரத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே மேற்கூறிய இரு மாநிலங்களிலும் கலவரம் மேலும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் ராணுவம் கொடி அணி வகுப்பு நடத்தியது.அத்துடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் மூடி விடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதால், அவைகளும் மூடப்பட்டிருந்தன.
இதனிடையே முதலமைச்சர் தருண் கோகாய் விடுத்துள்ள அறிக்கையில், கலவரம் பாதித்த பகுதிகளில் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரையும், துணை ராணுவப் படையினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வதந்திகளை பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|