|
| துப்பு துலங்காத டெல்லி குண்டு வெடிப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 15:33 IST ) | |
டெல்லியில் செப்டம்பர் 27 ஆம் தேதியன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னரும் இதுவரை குற்றவாளியை பிடிப்பதற்கான உருப்படியான துப்பு துலங்கவிலை.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் டெல்லியில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
அதில் 30 க்கும் அதிகமானோர் பலியாகினர் ; 100 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.அந்த அதிர்ச்சியிலிருந்து டெல்லி மீள்வதற்குள், 27 ஆம் தேதியன்று தெற்கு டெல்லியிலுள்ள மெஹ்ராலியில் உள்ள மார்க்கெட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாயினர்; 21 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பங்காளதேஷத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் இதுவரை குற்றவாளிகளை பிடிப்பதற்கான உருப்படியான துப்பு ஏதும் துலங்கவில்லை.இது குறித்து டெல்லி காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் குற்றவாளி பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களும் நிகழ்ந்திருப்பதால் அம்மாநில போலீசார்களுடனும் தாங்கள் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|