யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மக்கள் அதிருப்தி: காஷ்மீரில் ஊடரங்கு ‌வாபஸ்!
ஸ்ரீநகர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008   ( 12:48 IST )
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காஷ்மீர் பிரிவினை அமைப்புகள், லால்-சவுக் பகுதியில் நேற்று கண்டனப் பேரணி நடத்த திட்டமிட்டதால், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.

இதனால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

பள்ளிக் கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால், பிரிவினைவாத அமைப்புகளை எதிர்த்து பல இடங்களில் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த அமைப்புகள் அடிக்கடி இதுபோன்று போராட்டங்கள் நடத்தி, இயல்பு வாழ்க்கையை முடக்குவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

இதனால், தங்களது போராட்டத்தை கைவிட்டு, இயல்பு வாழ்க்கை திரும்ப ஒத்துழைப்பு அளிப்பதாக பிரிவினைவாத அமைப்புகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதலாம் என்றும், வணிக நிறுவனங்கள் இடையூறு இன்றி செயல்படலாம் என்றும், விவசாயிகள் வழக்கம் போல் தங்களது பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

இதை தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்கு மாநில அரசு ஊடரங்கு உத்தரவை விலக்கி கொண்டது.

இதற்கிடையே, தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆந்திரா: இருமாதங்களில் 10 நெசவுத் தொழிலாளர்கள் தற்கொலை
குஜராத்தில் 'நானோ' : மோடி- டாடா இன்று சந்திப்பு!
‌நீ‌ர் ப‌ங்க‌ீடு: இந்தியா-பாக் இடையே விரைவில் பே‌ச்சு!
எம்.பி.க்களுக்கு லஞ்சம் : அமர்சிங் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை
ஜம்முவில் ஜர்தா‌ரி உருவப்பொம்மை எரிப்பு!
குண்டுவெடிப்பு : இ மெயில் அனுப்பிய 4 பேர் கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...