|
| ஆந்திரா: இருமாதங்களில் 10 நெசவுத் தொழிலாளர்கள் தற்கொலை |
| ஐதராபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 12:48 IST ) | |
வறுமை காரணமாக, ஆந்திராவின் கரீம்நகர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை நெசவுத் தொழிலாளர்கள் 10 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் இருந்து இம்மாதம் 4-ம் தேதி வரையில் நெசவுத் தொழிலாளர்கள் 10 பேர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக, அரசு தரப்பு தெரிவிக்கிறது.
ஆனால், கடந்த மாதம் மட்டுமே 13 பேர் தற்கொலை செய்துகொண்டதாக, முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியை சந்தித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வறுமை நிலையை சமாளிக்க முடியாத துயரத்தில், கடந்த 27-ம் தேதியன்று நெசவுத் தொழிலாளர்கள் மூவர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பி.அசோக் தெரிவித்தார்.
இந்தத் தற்கொலைகளோடு, நோய்கள் மற்றும் பசிக்கொடுமையின் காரணமாக 11 பேர் உயிரிழந்ததாக, விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.மல்லேசம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆந்திர நெசவுத் தொழிலாளர்களின் இந்த நிலைக்கு, வேலையின்மை மற்றும் ஊதியப் பற்றாக்குறையே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாக, மாதம் ஒன்றுக்கு 20 நாள் மட்டுமே ரூ.100 தினக்கூலிக்கு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்று விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சனையைப் போக்குவதற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஆயினும், வறுமையில் வாடும் விவசாயிகள் மேற்கொள்ளும் முடிவைப் போன்றே, ஆந்திர நெசவுத் தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|