|
| குஜராத்தில் 'நானோ' : மோடி- டாடா இன்று சந்திப்பு! |
| அகமதாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 12:33 IST ) | |
நானோ கார் தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பது தொடர்பாக, முதல்வர் நரேந்திர மோடியை ரத்தன் டாடா இன்று சந்தித்துப் பேசுகிறார்.
ரூ.1 லட்சம் விலையுள்ள நானோ கார் தொழிற்சாலையை மேற்குவங்க மாநிலம் சிங்குரில் டாடா நிறுவனம் அமைத்து வந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் தொடர் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக கடந்தவாரம் ரத்தன் டாடா அறிவித்தார்.
இதனால், தங்களது மாநிலத்துக்கு வருமாறு ரத்தன் டாடாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அழைப்பு வந்தது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும் டாடா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அகமதாபாத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சான்ந்த் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையொட்டி சுமார் 1400 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரப்படும் என்றும், வரிகள் உள்பட அனைத்து விஷயங்களிலும் சலுகைகள் காட்டப்படும் என்றும் மோடி உறுதியளித்தார்.
இதைதொடர்ந்து, முதல்வர் நரேந்திர மோடியை ரத்தன் டாடா இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது மோடியுடன் முக்கிய அமைச்சர்களும், ரத்தன் டாடாவுடன் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்பர் என்று தெரிகிறது.
இப்பேச்சுவார்த்தையில் டாடா ஆலையை குஜராத்தில் நிறுவ ரத்தன் டாடா ஒப்புக் கொண்டால், அது மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்று கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|