யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
‌நீ‌ர் ப‌ங்க‌ீடு: இந்தியா-பாக் இடையே விரைவில் பே‌ச்சு!
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008   ( 11:12 IST )
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நீ‌ர் ப‌ங்க‌ீ‌ட்டு ‌விவகார‌ங்க‌ள் குறித்து இ‌ம்மாத இறுதியில் பே‌ச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சேனா‌ப் ஆ‌ற்‌றி‌ல் ‌திற‌ந்து‌விட‌ப்படு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவை இ‌ந்‌தியா குறை‌த்து‌வி‌ட்டது என்றும், இதனால் தங்களது நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கு‌ற்ற‌ம் சா‌ட்டி வருகிறது.

ஆனால், 'தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக திற‌ந்து‌விட‌ப்படு‌ம் ‌நீ‌‌ரி‌ன் அளவும் குறை‌க்க‌ப்ப‌ட்டது' என்று இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இம்மாதம் 3வது வாரத்தில் பே‌ச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது, சி‌ந்து ந‌தி ‌நீ‌ர்‌ ஆணைய‌த்‌தி‌ல் உ‌ள்ள இர‌ண்டு நா‌ட்டி‌ன் ஆணையர்க‌ளு‌ம் கூடி ‌விவா‌தி‌த்து, இரு தரப்பிலும் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌க் கூடிய வகை‌‌யி‌ல் ‌தீ‌ர்வு கா‌ண்பா‌ர்க‌ள்' எ‌ன்று எ‌தி‌ர்பா‌‌ர்‌க்கப்படு‌கிறது.

அதோடு, பா‌கி‌ஸ்தானை‌ச் சே‌ர்‌ந்த ‌சி‌ந்து ந‌தி‌ ‌நீ‌ர் ஆணை‌ய‌ர் சைய‌த் ஜமா‌த் அ‌லி ஷாவு‌ம் அவரது குழு‌வினரு‌ம் ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌‌லு‌ள்ள ப‌க்‌லிஹா‌ர் அணை‌க்கு நே‌ரி‌ல் செ‌ன்று ஆ‌ய்வு நட‌த்துவர் என்று தெரிகிறது.

450 மெகாவா‌ட் உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌ன் கொ‌ண்ட ப‌க்‌லிஹா‌ர் ‌நீ‌ர்‌மி‌ன் ‌தி‌ட்ட‌த்தை‌ செய‌ல்படு‌த்துவத‌ற்கு உலக வ‌ங்‌கி, ஒரு ஆ‌ண்டி‌ற்கு மு‌ன்பே ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையேயான கரு‌த்து வேறுபா‌டு காரணமாக அ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌ம் முடங்கியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எம்.பி.க்களுக்கு லஞ்சம் : அமர்சிங் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை
ஜம்முவில் ஜர்தா‌ரி உருவப்பொம்மை எரிப்பு!
குண்டுவெடிப்பு : இ மெயில் அனுப்பிய 4 பேர் கைது
'அஸ்ஸாம் கலவரத்திற்கு 'போடோ'தான் காரணம்'
காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு!
போதைப்பொருள்: மும்பையில் 240 இளைஞர்கள், பெண்கள் கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...