யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
எம்.பி.க்களுக்கு லஞ்சம் : அமர்சிங் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008   ( 17:52 IST )
நாடாளுமன்றத்தில் ம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில்,சமாஜ்வாதி கட்சித் தலைவர் மர்சிங்கிற்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என நாடாளுமன்ற கமிட்டி தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22 ம் தேதியன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சமாஜ்வதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமத் படேல் ஆகியோர் மீது புகார் எழுந்தது.

இது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கமிட்டி, நாடாளுமன்றத்தில் பணக்கட்டுக்களை தூக்கி காண்பித்து புகார் கூறிய பா.ஜனதா எம்.பி.க்களிடம் நடத்திய விசாரணை மற்றும் பண பேரத்தை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறி தொலைக் காட்சி சேனல் ஒன்று அளித்த டேப் ஆதாரம் ஆகியவற்றை தீவிரமாக ஆராய்ந்ததில் மேற்கூறிய இருவருக்கு எதிரான புகாரில் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வருகிற 17 ம் தேதியன்று நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினமே இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்முவில் ஜர்தா‌ரி உருவப்பொம்மை எரிப்பு!
குண்டுவெடிப்பு : இ மெயில் அனுப்பிய 4 பேர் கைது
'அஸ்ஸாம் கலவரத்திற்கு 'போடோ'தான் காரணம்'
காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு!
போதைப்பொருள்: மும்பையில் 240 இளைஞர்கள், பெண்கள் கைது
எல்லையில் ஊடுருவ முயற்சி: இந்த ஆண்டில் 70 பேர் பலி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...