|
| ஜம்முவில் ஜர்தாரி உருவப்பொம்மை எரிப்பு! |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008 ( 16:03 IST ) | |
ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவையும் மீறி, பிரிவினைவாத அமைப்பினர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் உருவப்பொம்மையை எரித்தனர்.
சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, 'காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி போராடுபவர்கள் தீவிரவாதிகள்' என குறிப்பிட்டிருந்தார்.
இதை கண்டித்து, பிரிவினைவாத அமைப்பினர் இன்று கண்டன பேரணி நடத்த ஏற்பாடு செய்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதையும் மீறி, பிரிவினைவாத அமைப்பினர் நூற்றுக் கணக்கானோர் இன்று கண்டன பேரணி நடத்தினர். அப்போது, ஜர்தாரியின் உருவ பொம்மையையும் எரித்தனர். ஜர்தாரிக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஜர்தாரியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கிலானி கூறுகையில், "காஷ்மீர் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் விடுதலைப் போராளிகள். இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம், இந்தியத் துணைக் கண்டத்தை பற்றிய வரலாறு ஜர்தாரிக்கு சுத்தமாகத் தெரியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
ஜர்தாரியின் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, "அவருக்கு காஷ்மீரின் உண்மை நிலவரம் தெரியாது." என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|