|
| சிங்குர் பிரச்சனையில் தீர்வு : மம்தா போராட்டம் வாபஸ் |
| கோல்கத்தா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 09:04 IST ) | |
சிங்குர் நிலப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸின் 'நானோ' ஆலைக்கு வெளியே மம்தா பானர்ஜி தலைமையில் நடத்தப்பட்டு வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இப்பிரச்சனைகள் தொடர்பாக சுமுகமான முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம், சிங்குரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'நானோ' சிறிய கார் தொழிற்சாலைக்காக, 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
ஆலைக்காக வழங்கப்பட்ட நிலத்தில், 400 ஏக்கரை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியினால் கடந்த 15 நாட்களாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், டாடா ஆலை தனது திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் முடிவு செய்தது.
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில், மேற்குவங்க ஆளுனர் கோபால கிருஷ்ண காந்தி ஈடுபட்டார். அவரது முயற்சியில், முதன்முறையாக இப்பிரச்சனை தொடர்பாக முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் நேற்று நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோல்கத்தாவிலுள்ள ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், விவசாயிகள் கோரும் நிலங்களை திரும்பத் தருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஒரு வாரத்துக்குள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் வரை, நானோ ஆலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற்ற மம்தா பானர்ஜி, 'இது நமக்கு கிடைத்த முழு வெற்றி' என்று கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|