யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. ஒப்புதல்: பாராட்டும், எதிர்ப்பும்!
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008   ( 11:24 IST )
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு 45 நாடுகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாராட்டுக்களும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.

அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபட, இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி மு‌ன்மொ‌ழிய‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான வரைவுக்கு, அணு எரிபொருள் வழங்கும் நாடுக‌ள் குழு (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) நேற்று ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் அமலுக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் நீங்கியுள்ளன.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாராட்டுக்களும், எதிர்ப்புகளும் சமஅளவில் குவிந்து வருகின்றன.

குவியும் பாராட்டுக்கள்:

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ், பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, அணுசக்தி விவகாரத்தில் மன்மோகனின் உறுதிப்பாட்டை பாராட்டிய புஷ், இந்த பிரச்சனைதை கண்ணியத்துடன் கையாண்டு வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் பிரதமரை வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், "பிரதமர் மன்மோகன் சிங்கின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது" என்று பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் "அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் கடுமையான முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

வலுக்கும் எதிர்ப்புகள்:

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மீதான எதிர்கட்சிகளின் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

இதுகுறித்து பாரதிய ஜனதாவின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது:

இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலம், அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமையை இந்தியா இழந்து விட்டது. இதை புஷ் நிர்வாகம், அந்நாட்டின் வெளியுறவு கமிட்டி தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

அணு எரிபொருள் மற்றும் அணு உலைகளைப் பெற, இந்தியாவைப் போல, வேறு எந்த நாடும் விதிமுறைகள் விஷயத்தில் இவ்வளவு தாராளமாக நடந்து கொள்ளாது.

ந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், தங்களுக்கும் ஆதாயம் கிடைக்கும் என்பதாலேயே, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இந்தியாவுக்கு சலுகை காட்ட ஆதரவு தெரிவித்தன. வ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தவறான தகவலை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார். எனவே, இதுகுறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி. நாடுகள் ஒப்புதல் அளித்தது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் ட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், "இந்திய நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நல்லதல்ல" என கவலை தெரிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணு வர்த்தகம் : இந்தியாவுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுகள் ஒப்புதல்
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம்
வட இந்தியாவில் நிலநடுக்கம்
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அணு ஆயுத‌‌ச் சோதனை: எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.நாடுகளுக்கு இந்தியா உறுதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...