யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அணு வர்த்தகம் : இந்தியாவுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுகள் ஒப்புதல்
வியன்னா (ஏஜென்சி), 6 செப்டம்பர் 2008   ( 16:55 IST )
அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி மு‌ன்மொ‌ழிய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தீ‌ர்மான வரைவுக்கு, அணு எரிபொருள் வழங்கும் நாடுக‌ள் குழு (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) இன்று ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்பது தெளிவாகியுள்ளது.

அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடு‌ப்பு உட‌ன்படி‌க்கை‌யி‌ல் கையெழு‌த்‌திடாததைச் சுட்டிக்காட்டி இ‌ந்‌தியா‌வுக்கு சாதகமாக செயல்பட, என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரியா, நியூசிலாந்து போன்ற சில உறுப்பு நாடுகள் கடுமையாக மறுத்து வந்தன

மேலும், அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி மு‌ன்மொ‌ழிய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தீ‌ர்மான வரை‌வுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதனால், இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி வழங்குவதற்கான அணு எரிபொருள் வழங்கும் நாடுக‌ள் குழுவின் (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) இரண்டு நாள் கூட்டத்தில் எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் புஷ் சீனாவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.இதனால் சீனாவின் எதிர்ப்பு வேகம் குறைந்தது.

இந்த நிலையில், என்.எஸ்.ஜி. நாடுகள் கூட்டம் இன்று மீண்டும் கூடி ஆலோசித்த நிலையில், அதில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளும், அணு வர்த்தகத்தில் இந்தியாவுக்கு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பது என ஒருமித்த முடிவை மேற்கொண்டன.

முன்னதாக இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தால், அது இவ்விரு நாடுகளின் வலுவான உறவுக்கு அடித்தளமாக அமைந்து விடும் என்ற எண்ணத்தில் ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சீனா செயல்பட்டு வந்தது.

நேற்று நடைபெற்ற அணு எரிபொருள் வழங்கும் நாடுக‌ள் குழுவின் (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.)கூட்டத்தில்,
அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி அளிக்கக்கூடாது என்று சீனா பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்தது.

ஒரு கட்டத்தில்,கூட்டத்தில் கலந்துகொண்ட சீன பிரதிநிதி,வெளிநடப்பு செய்யப்போவதாகவும் என்று கூட மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த தகவல் அறிந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சீன பிரதமர் ஹூ ஜிண்டாவோவைத் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது இந்தியாவுக்கு விலக்கு அளிப்பதை எதிர்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இதனிடையே சீனாவின் இந்த எதிர்ப்பை அறிந்த இந்தியாவும் கடும் அதிருப்தியடைந்தது.

இதனால் டெல்லி மற்றும் கோல்கத்தா ஆகிய நகரங்களில் சீனாவின் புதிய தூதரகத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை இந்தியா வரவிருந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியேச்சியின் இந்திய பயணத்தை ரத்து செய்யுமாறு கோரலாமா என்று பரிசீலித்ததாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம்
வட இந்தியாவில் நிலநடுக்கம்
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அணு ஆயுத‌‌ச் சோதனை: எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.நாடுகளுக்கு இந்தியா உறுதி
அஸ்ஸாமில் வெள்ள‌த்திற்கு 12 லட்சம் பேர் பாதிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...