யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 15:57 IST )
அணு வர்த்தகத்தில் இந்தியா ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெறுவதில் என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ம்.கே.நாராயணன் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி வழங்குவதற்கான அணு எரிபொருள் வழங்கும் நாடுக‌ள் குழுவின் (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) இரண்டு நாள் கூட்டத்தில் எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடு‌ப்பு உட‌ன்படி‌க்கை‌யி‌ல் கையெழு‌த்‌திடாததைச் சுட்டிக்காட்டி இ‌ந்‌தியா‌வுக்கு சாதகமாக செயல்பட, என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரியா, நியூசிலாந்து போன்ற உறுப்பு நாடுகள் கடுமையாக மறுத்து வருகின்றன.இதுபற்றி, பிரணாப் மற்றும் நாராயணன் ஆகியோரிடம் மன்மோகன் சிங் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இ‌ந்‌தியாவுக்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி மு‌ன்மொ‌ழிய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தீ‌ர்மான வரை‌வுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனிடையே, என்.எஸ்.ஜி.யின் 45 உறுப்பு நாடுகளிடம் இருந்து ஒப்புதல் பெறுவது உறுதி என அமெரிக்கா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம்
வட இந்தியாவில் நிலநடுக்கம்
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அணு ஆயுத‌‌ச் சோதனை: எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.நாடுகளுக்கு இந்தியா உறுதி
அஸ்ஸாமில் வெள்ள‌த்திற்கு 12 லட்சம் பேர் பாதிப்பு
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விட க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் வலியுறுத்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...