|
| வட இந்தியாவில் நிலநடுக்கம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 12:47 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர், ஜம்மு, டெல்லி மற்றும் சண்டிகரில் இன்று காலை 11.20 மணியளவில் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் தொடர்ந்து சில நிமிடங்கள் நீடித்ததால் மக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஹிந்த்குஷ் மலைப்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்டதால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|