யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 12:18 IST )
ஹூரியத் மாநாட்டு அமைப்பின் இரு பிரிவும் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக காஷ்மீரில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்து.

அமர்நாத் கோவிலுக்கு வரும் யாத்ரீகர்கள் பயன்பாட்டிற்காக அரசு நிலத்தை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக மாநில அரசுக்கும், ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி ( ஸாஸ் )க்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டிற்கு அடையாள எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் மாநாட்டின் இரு பிரிவும் அழைப்பு விடுத்திருந்தன.

அதன்படி காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்று கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்தும் இல்லாத நிலையில், பேருந்துகளும் ஓடாததால் அரசு அலுவலகங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்களே பணிக்கு வந்திருந்தனர்.

ஸ்ரீநகர், அனந்த் நாக், குல்காம்,ஷோபியன், புல்வாமா, பத்காம், பந்திபோரா,கேந்தர்பல், குப்வாரா மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பிரிவினைவாத தலைவர்களான உமர் ஃபரூக் மற்றும் முகமது யாசீன் மாலிக் ஆகியோர் தொடர்ந்து மூன்றாவது நாளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணு ஆயுத‌‌ச் சோதனை: எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.நாடுகளுக்கு இந்தியா உறுதி
அஸ்ஸாமில் வெள்ள‌த்திற்கு 12 லட்சம் பேர் பாதிப்பு
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விட க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் வலியுறுத்தல்
பிஎம்டபிள்யூ வழக்கு : சஞ்சீவ் நந்தாவுக்கு 5 ஆண்டு சிறை
காஷ்மீரில் நிலநடுக்கம் ; மக்கள் பீதி
மி‌ன்ன‌ல் தா‌க்‌கி ராணுவ ‌வீர‌ர் ப‌லி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...