|
| அணு ஆயுதச் சோதனை: என்.எஸ்.ஜி.நாடுகளுக்கு இந்தியா உறுதி |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 19:21 IST ) | |
அணு ஆயுதச் சோதனை தொடர்பாக இந்தியா தனக்கு தானே விதித்துக்கொண்டுள்ள சுயக் கட்டுப்பாட்டை முழுமையாகப் பின்பற்றும் என்றும் வெளியுறவுத் துறை =அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி, இந்தியா சார்பில் அமெரிக்கா தீர்மான வரைவு ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
அதில் அணு சக்தித் தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) நாடுகளின் வலியுறுத்தலின்பேரில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் மீது என்.எஸ்.ஜி.இன்று இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
முன்னதாக அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (என்.பி.டி.) கையெழுத்திடாத இந்தியாவிற்கு ஏன் அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று என்.எஸ்.ஜி. உறுப்பு நாடுகள் சில கேள்வி எழுப்பியிருந்தன.
இந்த சூழ்நிலையில்,என்.எஸ்.ஜி. உறுப்பு நாடுகளின் இந்த ஐயப்பாட்டை போக்கும் வகையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதிலும், எந்தச் சூழ்நிலையிலும் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.அணு ஆயுதச் சோதனை தொடர்பாக எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்டுள்ள சுயக் கட்டுப்பாட்டை (Unilateral Moratorium) முழுமையாகப் பின்பற்றுவோம்.
அணு ஆயுதப் போட்டி உள்ளிட்ட எந்தவிதமான ஆயுதப் போட்டியிலும் பங்கேற்க மாட்டோம். அணு எரிபொருள் செறிவூட்டல், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு சுழற்சி செய்தல் ஆகிய தொழில்நுட்பங்களை அணு ஆயுத தொழில்நுட்பம் பெறாத நாடுகளுக்கு அளிக்கும் நாடாக இந்தியா இருக்காது என்று உலக நாடுகளுக்கு உறுதியளிக்கிறோம்.
அணு சக்தி தொழில்நுட்பத்தை அமைதி தேவைகளுக்காக விற்கும் நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது. குறிப்பாக, தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களை உலகிற்கு வழங்கவும், இந்தியாவிற்கு பலனளிக்கும் வகையிலான சர்வதேச அளவிலான எரிபொருள் தொகுப்பு உருவாக்கப்படுவதையும் நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இன்றைய என்.எஸ்.ஜி. கூட்டத்தின் முதல் சுற்றுப் பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இன்னும் சில நாடுகள் இந்தியாவிற்கு விலக்குடன் அனுமதி வழங்குவதில் அதிருப்தி தெரிவித்ததாக கிடைத்த தகவலையடுத்து, அவ்வாறு அதிருப்தி வெளியிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை இந்தியாவின் உயர் அதிகாரிகள் சந்தித்துத் இந்திய நிலைப்பாட்டை விளக்கியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|