|
| அஸ்ஸாமில் வெள்ளத்திற்கு 12 லட்சம் பேர் பாதிப்பு |
| புவனேஸ்வர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 18:52 IST ) | |
அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுவதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர், தங்களது இருப்பிடங்களை காலி செய்துவிட்டு,பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்திற்கு இதுவரை அம்மாநிலத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அம்மாநில அரசு சார்பில் ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கஸிரங்கா தேசிய பூங்காவில் நீர் புகுந்ததைத் தொடர்ந்து அங்குள்ள வன விலங்குகள் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சுற்றித் திரிகின்றன.
இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் நான்கு விலங்குகள் வாகனங்களில் சிக்கி இறந்துள்ளதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாம் பகுதிகளில் வெள்ளம் ஓரளவு வடிந்துள்ளதாலும், மேல் அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப் பெருக்கு கட்டுக்குள் வந்துள்ளதாலும் இன்னும் ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|