யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிஎம்டபிள்யூ வழக்கு : சஞ்சீவ் நந்தாவுக்கு 5 ஆண்டு சிறை
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 15:33 IST )
6 பேரை பி.எம்.டபிள்யூ காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி எஸ்.எம்.நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தாவுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1999 ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, டெல்லியின் லோதி காலனி பகுதியில், அதிகாலையில் தாறுமாறாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதி 9 வயது சிறுவன் மற்றும் 3 போலீஸார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் நந்தா, காரில் இருந்த அவருடைய நண்பர் மானிக் கபூர்,தொழிலதிபர் ராஜீவ் குப்தா, அவருடைய நிறுவனத்தில் பணியாற்றும் போலா நாத், ஷியாம் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் கடந்த 2 ம் தேதியன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி வினோத் குமார்,இந்திய தண்டனைச் சட்டம் 304 வது பிரிவின் கீழ் சஞ்சீவ் நந்தாவை குற்றவாளி என அறிவித்தார்.

மேலும் விபத்துக்குப் பின்னர் காரில் ஏற்பட்ட ரத்தக் காயம், உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தி, சாட்சியத்தை அழிக்க முயன்ற ராஜீவ் குப்தா, போலா நாத், ஷியாம் சிங் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதாக அவர் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

விபத்து நடந்த போது காரில் இருந்த மானிக் கபூர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் அவரை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்த தீர்ப்பை இன்று அளித்த நீதிபதி,சஞ்சீவ் நந்தாவுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நந்தாவின் குடும்ப நண்பர் ராஜீவ் குப்தா, போலா நாத், ஷியாம் சிங் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீரில் நிலநடுக்கம் ; மக்கள் பீதி
மி‌ன்ன‌ல் தா‌க்‌கி ராணுவ ‌வீர‌ர் ப‌லி
சோனியா வந்த விமானத்தில் கோளாறு ; அவசர தரையிறக்கம்
சிங்குர் விவகாரம் : மம்தாவுடன் மேற்குவங்க ஆளுனர் பேச்சு
தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை : மத்திய அரசு திட்டம்
பிரதமர் மீது உரிமை மீறல் : பா.ஜனதா திட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...