யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீரில் நிலநடுக்கம் ; மக்கள் பீதி
ஸ்ரீநகர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 13:44 IST )
ஜம்மு - காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியே ஓடி வந்தனர்.

இன்று காலை 10.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓரிரு நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளைவிட்டு ஓடிவந்தனர்.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையின் ஏதோ ஒரு இடத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மி‌ன்ன‌ல் தா‌க்‌கி ராணுவ ‌வீர‌ர் ப‌லி
சோனியா வந்த விமானத்தில் கோளாறு ; அவசர தரையிறக்கம்
சிங்குர் விவகாரம் : மம்தாவுடன் மேற்குவங்க ஆளுனர் பேச்சு
தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை : மத்திய அரசு திட்டம்
பிரதமர் மீது உரிமை மீறல் : பா.ஜனதா திட்டம்
ஜம்மு - காஷ்மீர் தேர்தல் : தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...