யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோனியா வந்த விமானத்தில் கோளாறு ; அவசர தரையிறக்கம்
பெங்களூர்(ஏஜென்சி), 4 செப்டம்பர் 2008   ( 17:29 IST )
கோவை செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் அவசரமாக பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சோனியா காந்தி, இன்று ஈரோட்டில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ௦பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி டெல்லியில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் கோவை புறப்பட்டார் சோனியா காந்தி.அவருடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் உடன் வந்தார்.

இந்நிலையில், அவர்கள் வந்த விமானத்தில் திடீர் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவரது விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து வேறு ஒரு விமானம் பெங்களூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த விமானத்தில் அவர்கள் இருவரும் கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிங்குர் விவகாரம் : மம்தாவுடன் மேற்குவங்க ஆளுனர் பேச்சு
தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை : மத்திய அரசு திட்டம்
பிரதமர் மீது உரிமை மீறல் : பா.ஜனதா திட்டம்
ஜம்மு - காஷ்மீர் தேர்தல் : தேர்தல் ஆணையம் ஆலோசனை
அணுசக்தியில் புது நிபந்தனை : பா.ஜ., இடதுசாரி கண்டனம்
புதுவை முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...