|
| சிங்குர் விவகாரம் : மம்தாவுடன் மேற்குவங்க ஆளுனர் பேச்சு |
| சிங்குர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 15:22 IST ) | |
சிங்குரில் டாடா மோட்டார்ஸ்சின் நானோ கார் தயாரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் விவசாயிகளுடனான மேற்குவங்க ஆளுனர் கோபால கிருஷ்ண காந்தியின் பேச்சுவார்த்தை தொடங்கியது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டால், மேற்குவங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்களும் தயக்கம் காட்ட நேரும் என்பதால், இவ்விவகாரத்தில் சுமுகமான முறையில் தீர்வு காண மாநில அரசு விரும்புகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாக, மம்தா பானர்ஜியிடம் மேற்குவங்க மாநில ஆளுனர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.
சிங்குரில் போராட்டம் தொடர்ந்தால், தாங்கள் அங்கிருந்து வெளியேற நேரிடும் என மேற்கு வங்க மாநில அரசுக்கு ரத்தன் டாடா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நானோ கார் திட்டத்துக்கென வேறு மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக வழங்கப்படட் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களில், 400 ஏக்கரை திரும்பத் தர வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை.
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டால், நானோ கார் திட்டமே சிங்குரில் கைவிடப்பட்டுவிடும் என்பதால், அதற்கு மேற்குவங்க அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.
சிங்குரில் 400 ஏக்கர் நிலத்தை திரும்பத் தர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், மேற்குவங்கத்தில் இருந்து டாடா வெளியெறுவதை விரும்பவில்லை என்று கூறி, பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது, அம்மாநில அரசுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|