|
| தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை : மத்திய அரசு திட்டம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 4 செப்டம்பர் 2008 ( 15:14 IST ) | |
தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்த தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் கருத்துக் கணிப்பு மற்றும் வாக்களிப்புகு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கடந்த 9 வருடங்களுக்கு முன்னரே தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர், டெல்லி, மிசோராம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் வரவிருப்பதால், மேற்கூறிய தடையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மேலும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் தேதியுடன் தற்போது அமலில் உள்ள ஆளுநர் ஆட்சி முடிவடைய உள்ளது.
இந்நிலையில், தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள், ஒரே மாநிலத்திலேயே பல்வேறு கட்டங்களாக நடத்தப்படுகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அரசு கருதுகிறது.
இதனால் கருத்துக் கணிப்பு மற்றும் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்த தடை விதிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய பிரிவை சேர்க்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டத் துறை அமைச்சகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
ஆலோசனைக்குப் பின்னர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவில் திருத்தம் செய்யப்பட்டால், அந்த சட்டத் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், தேர்தல் அறிவிக்கை வெளியான நாளிலிருந்து கடைசிக் கட்ட தேர்தல் முடிவடையும் வரை கருத்துக் கணிப்புக்கான அமலில் இருக்கும்.
தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் ஆணையம் அரசை கேட்டுக் கொண்டபோதிலும்,அது கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை மறுப்பதாக உள்ளது எனக் கூறி உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.
அதே சமயம் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் உள்பட முக்கிய பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|