|
| புதுவை: முதல்வராக வைத்தியலிங்கம் தேர்வு! |
| புதுச்சேரி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 18:18 IST ) | |
புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி இன்று பதவி விலகிய நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராக வைத்தியலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. ரங்கசாமிக்கு எதிராக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி ஆரம்பித்தனர். ரங்கசாமியை மாற்றும்படி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர்.
இதன் காரணமாக, தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ரங்கசாமிக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ரங்கசாமிக்கு எதிராக இருந்ததால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இதனால், முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி இன்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஆளுனர் கோவித் சிங் குர்ஷரிடம் வழங்கினார். இதைதொடர்ந்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் புதுச்சேரி தலைமைச் அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில், தற்போதைய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான வைத்தியலிங்கம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|