யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பீகார் வெள்ளம் : ஒரு வாரமாக தவிக்கும் 20 பள்ளிக் குழந்தைகள்
பாட்னா( ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 16:58 IST )
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகாரில், பள்ளிக் குழந்தைகள் 20 பேர் ஒரு வார காலமாக பள்ளியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

நேபாளத்திலிருந்து பீகாரை நோக்கி பாய்ந்து வரும் கோஸி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பீகாரில் 15 க்கும் அதிகமான மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சாலைகளும் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாதேபுரா மாவட்டத்தில் உள்ள லிட்டில் ஸ்டார் என்ற பள்ளியைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 20 குழந்தைகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடந்த ஒரு வார காலமாக தவித்து வருகின்றனர்.

இதனை தொலை பேசி மூலம் உறுதிபடுத்தியுள்ள அந்த பள்ளியின் முதல்வர் எஸ்.எம். ஷோன்ஸி, அந்த குழந்தைகளை தாம் இதுவரை பத்திரமாக வைத்துள்ளபோதிலும், உணவு பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரசாயன தொழிற்சாலையில் தீ: 10 பெண்கள் உடல் கருகி சாவு
தீவிரவாதிகள் ஊடுருவல் : ஜம்முவில் உச்சக்கட்ட பாதுகாப்பு
வெள்ளம் : பீகாருக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி உதவி
ஒரிஸ்ஸாவில் வன்முறை நீடிக்கிறது
புதுவை முதல்வர் ரங்கசாமி ராஜினாமா
பீகார் வெள்ளம் : பிரதமர், சோனியா பார்வையிடுகின்றனர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...