|
| தீவிரவாதிகள் ஊடுருவல் : ஜம்முவில் உச்சக்கட்ட பாதுகாப்பு |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 15:51 IST ) | |
ஜம்முவில் மேலும் தீவிரவாதிகள் பலர் ஊடுருவியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மிஷ்ரிவாலாவில் 3 தீவிரவாதிகளுடன் தொடர்ந்து 19 மணி நேரம் சண்டையிட்டு, அவர்களை நேற்று நள்ளிரவில் ராணுவத்தினர் கொன்றனர்.
தீவிரவாதிகள் வசம் சிக்கிய 10 பிணையக் கைதிகளில் நான்கு சிறுவர்கள் உள்பட 7 பேரை ராணுவம் மீட்டது. அதேநேரத்தில் மூன்று பிணையக் கைதிகள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிரமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.ஜி.பி. குல்தீப் கோடா கூறுகையில், "ஜம்மு நகரில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு, கண்காணிப்புப் பணிகளை மேலும் முடுக்கிவிடுவது அவசியமாகிறது," என்றார்.
மேலும், "நகர் முழுவதும் 24 மணி நேர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது," என்றார் அவர்.
முத்தி, கஜன்சூ, மார், அக்னூர், கோரடோ, ஹிரங்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கண்காணிப்புப் பணிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏஜென்சியினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|