|
| வெள்ளம் : பீகாருக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி உதவி |
| பாட்னா (ஏஜென்சி), 28 ஆகஸ்டு 2008 ( 14:12 IST ) | |
பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தேசிய பேரழிவாக அறிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், உடனடி உதவியாக 1000 கோடி ரூபாயும், 1.25 லட்சம் டன் உணவு தானியங்களும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நேபாளத்திலிருந்து பீகாரை நோக்கி பாயும் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக, பீகாரில் 15 க்கும் அதிகமான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மழை வெள்ளத்தினால் நேற்று வரை 60 க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ள நிலையில்,சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன.
சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.இதனால் மீட்பு பணிகளில் ராணுவமும், ராணுவ ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே டெல்லியில் நேற்று பிரதமரை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்திற்கு மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதியுதவியும், ஒரு லட்சம் டன் உணவு தானியங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இன்று டெல்லியிலிருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் பீகார் மாநிலம் பூர்னியா என்ற இடத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுபால், ஷகார்ஸா,அராரியா மற்றும் மாதேபுரா மாவட்டங்களை பார்வையிட்டனர்.
அவர்களுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்,மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் நாராயண் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லோக்சபை தொகுதிகளைச் சேர்ந்த 3 பா.ஜனதா எம்.பி.க்கள் ஆகியோர் உடன் சென்றனர்.
வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர், பீகார் வெள்ளத்தை தேசிய பேரழிவாக அறிவித்த பிரதமர், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக உடனடி உதவியாக 1000 கோடி ரூபாயும், 1.25 லட்சம் டன் உணவு தானியங்களும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|