யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஒரிஸ்ஸாவில் வன்முறை நீடிக்கிறது
புவனேஸ்வர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 13:52 IST )
ஒரிஸ்ஸா மாநிலம் காந்தமாலில் லவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், ன்றும் அங்கு லவரம் நீடிக்கிறது.

கடந்த சனிக்கிழமையன்று இரவில் காந்தமால் மாவட்டம் ஜலேஸ்பேட்டா என்ற இடத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மர்ம கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் வி.எச்.பி.யினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால்,கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.

காந்தமால் மாவட்டத்தில் மட்டுமின்றி ஒரிசா முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.காந்தமால் மாவட்டத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார்.மேலும் பல இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் காந்தமால் மாவட்டத்தில் வன்முறை கட்டுகடங்காமல் போனதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு பின்னரும் காந்தமால் மாவட்டத்தில் இன்றும் இரண்டாவது நாளாக பல இடங்களில் கலவரம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திகாபலி, உதயகிரி மற்றும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதற்றம் நிலவுகிற போதிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தின் 12 பிளாக்குகளில் 6 பிளாக்குகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இதர பிளாக்குகளில்தான் நிலைமை ஓரளவு பதற்றமாக காணப்படுவதாகவும் டிஐஜி ஆர்.பி.கோச்சே தெரிவித்தார்.

வன்முறை அதிகமாக நடைபெறும் இடங்களுக்கு கூடுதல் மத்திய படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புதுவை முதல்வர் ரங்கசாமி ராஜினாமா
பீகார் வெள்ளம் : பிரதமர், சோனியா பார்வையிடுகின்றனர்
ஜம்முவில் ராணுவம் பதிலடி : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சோரன்!
சூரத்தில் 25 குண்டுகள் வைக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது
ஒரிஸ்ஸா வன்முறை : போப் பெனடிக் கண்டனம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...