|
| புதுவை முதல்வர் ரங்கசாமி ராஜினாமா |
| புதுச்சேரி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 13:46 IST ) | |
புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது.
சமீபகாலமாக ரங்கசாமிக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்தது. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமியை மாற்றும்படி போர்க்கொடி தூக்கினர்.
கடந்த வாரம் மத்திய அமைச்சர் வயலார் ரவி தலைமையிலான காங்கிரஸ் மேலிடக் குழு முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பெரும்பான்மையான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமியை நீக்க வேண்டும் என்றும், அவருக்கு பதிலாக அமைச்சர் வைத்திலிங்கத்தை முதல் அமைச்சராக்கும்படியும் கருத்து தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில், முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டது. ஆனால்,ரங்கசாமி பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில் புதிய முதல்வரை தேர்ந்து எடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பெரும்பாலான அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ரங்கசாமி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|