யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பீகார் வெள்ளம் : பிரதமர், சோனியா பார்வையிடுகின்றனர்
பாட்னா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 12:17 IST )
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இன்று பார்வையிடுகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ள அவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் உடன் செல்ல உள்ளார்.

நேபாளத்திலிருந்து பீகாரை நோக்கி பாயும் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக, பீகாரில் 15 க்கும் அதிகமான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மழை வெள்ளத்தினால் நேற்று வரை 60 க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ள நிலையில்,சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன.

சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் மீட்பு பணிகளில் ராணுவமும், ராணுவ ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளனர்.

இதனிடையே டெல்லியில் நேற்று பிரதமரை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்திற்கு மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதியுதவியும், ஒரு லட்சம் டன் உணவு தானியங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எனவே இது குறித்த அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங்,வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்முவில் ராணுவம் பதிலடி : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சோரன்!
சூரத்தில் 25 குண்டுகள் வைக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது
ஒரிஸ்ஸா வன்முறை : போப் பெனடிக் கண்டனம்
தீவிரவாதிகள் ஊடுருவல் : பாக்.கிடம் இந்தியா கடும் ஆட்சேபம்
ஒரிஸ்ஸா : கண்டதும் சுட உத்தரவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...