யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்முவில் ராணுவம் பதிலடி : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 12:05 IST )
ஜம்முவில் ராணுவத்துடன் நடந்த 16 மணி நேர மோதலில், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்முவில் உள்ள மிஷ்ரிவாலா என்ற இடத்தில், நேற்று காலை போலீஸ் சீருடை அணிந்த 3 தீவிரவாதிகள், ராணுவ சோதனைச் சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியாகினர்.

பின்னர், ஓர் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் வீட்டில் இருந்த 6 பேரை பிணையக் கைதிகளாக பிடித்தனர்.

இதையடுத்து, அந்த வீட்டை சுற்றிவளைத்த ராணுவம் பிணைக்கைதிகளை மீட்க கடுமையாக போராடியது. நேற்று காலை சுமார் 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது.

சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையின் முடிவில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

மேலும் 2 பிணைக்கைதிகள் நிலை என்ன என்பது குறித்து தகவல் இல்லை. அந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சோரன்!
சூரத்தில் 25 குண்டுகள் வைக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது
ஒரிஸ்ஸா வன்முறை : போப் பெனடிக் கண்டனம்
தீவிரவாதிகள் ஊடுருவல் : பாக்.கிடம் இந்தியா கடும் ஆட்சேபம்
ஒரிஸ்ஸா : கண்டதும் சுட உத்தரவு
லஞ்சத்தை ஒழிப்பேன்: சிரஞ்சீவி உறுதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...