யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சோரன்!
ராஞ்சி (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 18:02 IST )
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் இன்று பதவியேற்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, சிபுசோரன் சார்பில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என்று பேரம் பேசப்பட்டது.

அதன்படி, முதல்வர் பதவி வழங்குவதற்கான எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்காததால் மதுகோடா அரசுக்கு அளித்துவந்த ஆதரவை சிபுசோரன் வாபஸ் பெற்றார். இதனால், மதுகோடா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், சுயேட்சைகளின் ஆதரவை திரட்டி ஆட்சியமைக்கும் முயற்சிகளை சிபுசோரன் மேற்கொண்டார். ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் சமரசம் செய்ததன் பேரில் மதுகோடாவின் ஆதரவையும் பெற்றார்.

இதன் பின்னர், தனக்கு ஆதரவளிக்கும் 42 எம்எல்ஏக்களின் பட்டியலை சிபுசோரன் நேற்று முன்தினம் ஆளுனரிடம் ஒப்படைத்தார்.

இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் 17 பேர், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் -9, ஆர்.ஜே.டி -7, யு.ஜி.டி.பி.- 2, ஜார்க்கண்ட் கட்சி -1, தேசியவாத காங்கிரஸ் 1, பார்வர்டு பிளாக் -1 மற்றும் சுயேட்சை எம்ல்ஏக்கள் 4 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இதனால், சிபுசோரனை ஆட்சியமைக்க வரும்படி ஆளுனர் சையத் சிப்தே ரஸி நேற்று மாலை அழைப்பு விடுத்தார்.

இதைதொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சிபுசோரன் இன்று பதவியேற்றார். ஆளுனர் சைதய் சிப்தே ரஸி சோரனுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

வரும் 1ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி சிபுசோரனுக்கு ஆளுனர் சையத் சிப்தே ரஸி உத்தரவிட்டுள்ளார்.

64 வயதாகும் சிபுசோரன், ஜார்க்கண்ட் மாநில முதல்வராவது இது 2வது முறை. கடந்த 2005ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற சிபுசோரன் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 9 நாட்களில் பதவி விலகினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சூரத்தில் 25 குண்டுகள் வைக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது
ஒரிஸ்ஸா வன்முறை : போப் பெனடிக் கண்டனம்
தீவிரவாதிகள் ஊடுருவல் : பாக்.கிடம் இந்தியா கடும் ஆட்சேபம்
ஒரிஸ்ஸா : கண்டதும் சுட உத்தரவு
லஞ்சத்தை ஒழிப்பேன்: சிரஞ்சீவி உறுதி
ஜம்மு : ராணுவ முற்றுகையில் தீவிரவாதிகள் ; 4 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...