யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சூரத்தில் 25 குண்டுகள் வைக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது
சூரத் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 17:52 IST )
சூரத்தில் 25 வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட நிகழ்வில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு பேரை, அந்நகரின் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

இதுகுறித்து சூரத் காவல்துறை ஆணையர் ஆர்.எஸ்.எஸ்.பிரார் கூறுகையில், "நகரில் பல்வேறு இடங்களிலும் வெடிகுண்டுகள் வைப்பதற்கு உதவிய உள்ளூரைச் சேர்ந்த தன்வீர் பதான் மற்றும் ஜாகிர் படேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.

அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தைச் சேர்ந்த முஃப்தி அபு பஷீர், சாஜித் மன்சூரி, யூனுஸ் மன்சூரி மற்றும் சம்சுதீன் ஷேக் ஆகியோர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், சூரத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய உளவுத்துறை மற்றும் மற்ற மாநிலங்களின் காவல்துறையினரின் உதவியுடன், அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கைது செய்ய முடிந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாத இறுதியில், அகமதாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, சூரத்தை தகர்ப்பதற்கு வைக்கப்பட்ட 25 குண்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒரிஸ்ஸா வன்முறை : போப் பெனடிக் கண்டனம்
தீவிரவாதிகள் ஊடுருவல் : பாக்.கிடம் இந்தியா கடும் ஆட்சேபம்
ஒரிஸ்ஸா : கண்டதும் சுட உத்தரவு
லஞ்சத்தை ஒழிப்பேன்: சிரஞ்சீவி உறுதி
ஜம்மு : ராணுவ முற்றுகையில் தீவிரவாதிகள் ; 4 பேர் பலி
ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் ;3 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...