|
| ஒரிஸ்ஸா வன்முறை : போப் பெனடிக் கண்டனம் |
| வாடிகன் சிட்டி/புவனேஸ்வர் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 16:58 IST ) | |
ஒரிஸ்ஸாவில் நிகழ்த்தப்பட்டு வரும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறைக்கு, போப் பெனடிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரிஸ்ஸாவில் வன்முறை வெடிப்பதற்கு காரணமான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் கொலையையும் அவர் கண்டித்துள்ளார்.
வாடிகன் சிட்டியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாரம் தோறும் வழக்கமாக உரையாற்றும் போப் பெனடிக், "அனைத்து மனித உயிர் மீதான தாக்குதல்களை கண்டிக்கிறேன்," என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காந்தமால் மாவட்டம் ஜலேஸ்பேட்டா என்ற இடத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மர்ம கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் வி.எச்.பி.யினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அங்கு கலவரம் வெடித்தது.
அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|