|
| தீவிரவாதிகள் ஊடுருவல் : பாக்.கிடம் இந்தியா கடும் ஆட்சேபம் |
| ஜம்மு (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 15:17 IST ) | |
எல்லைக்காப்பாலிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஜம்மு - காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை தள்ளிவிடும் பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஜம்மு அருகே எல்லைக்கப்பாலிலிருந்து தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ ஏதுவாக, எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே நேற்று அதிகாலை 1.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவினர்.அவ்வாறு ஊடுருவிய தீவிரவாதிகளில் 3 பேர்தான் இன்று ஜம்முவில் இன்று 3 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருப்பவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து, ராணுவத்தினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இருநாட்டு எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் பிரச்சனையை எழுப்பிய இந்தியா, இந்திய படையினரின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்தி, தீவிரவாதிகளை ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வதற்கு பாகிஸ்தானிடம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததாக ஜம்முவிற்கான எல்லை பாதுகாப்பு படை டிஐஜி சங்வான் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|